திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா

திண்டுக்கல், நத்தம் தாலுகா, ஆவிச்சிட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பள்ளிக்கூடத்தான் மற்றும் இவரது மனைவி நாச்சம்மாள் இருவரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக நத்தம் போலீசார் விசாரணை செய்யாமல் எதிர் மனுதாரரிடம் பணம் வாங்கிக்கொண்டு தங்களை அலைக்கழிப்பதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா