காய்ச்சல் பாதித்து குழந்தை பலி

by Staff / 25-09-2023 04:13:23pm
 காய்ச்சல் பாதித்து குழந்தை பலி

சிவகிரியில் மர்ம காய்ச்சலுக்கு, எட்டு மாத பெண் குழந்தை பலியானது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகிரி, தாண்டாம்பாளையம்,மேற்கு தெருவை சேர்ந்தவர் சுகுமார். அதே பகுதியில், தனியார் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவருக்கு எட்டு மாத பெண் குழந்தை உள்ளது. மூன்று நாட்களுக்கு முன் குழந்தை காய்ச்சலால் பாதித்தது. இதனால் ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இந்நிலையில் நேற்று காலை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, குழந்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாலையில் குழந்தை இறந்தது. வைரஸ் காய்ச்சலா அல்லது டெங்கு காய்ச்சலா? என்பது தெரியவில்லை.

 

Tags :

Share via

More stories

Logo