செந்தில் பாலாஜி மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

by Staff / 04-03-2024 11:27:45am
செந்தில் பாலாஜி மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதி அல்லி அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை 3 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், 2 முறை சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.அதே போல் அவருக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் 22வது முறையாக நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் முடிகிறது. தொடர்ந்து, மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படும் என தெரிகிறது.

 

Tags :

Share via