இன்று பாராளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்

by Admin / 17-12-2024 01:38:13pm
இன்று பாராளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்

இன்று பாராளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆளும் மத்தியஅரசு தாக்கல் செய்தது. இம்மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி திமுக உன்கிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் வழங்கி விவாதத்தில் பங்கேற்க உள்ளன. இந்தியாவில் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து உள்ள எம்எல்ஏக்கள் கொண்ட 4120 சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை வைப்பதற்கும் அதன் பின்னர் 100 நாட்கள் சென்ற பின்னர் 89 ஆயிரத்திற்குஅதிகமான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளான 31 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் கொண்ட உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்தப்படும் என்பது மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இந்தியா முழுமைக்கான தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை என்றும் சரிவர நடத்த முடியாது என்றும் எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசு முன்னாள் குடியரசு தலைவர் தலைமையிலான குழு இதுகுறித்து ஆய்ந்து மசோதாவை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியசட்டஇணையமைச்சர் அா்ஜீன்ராம் மாசோதாவை தாக்கல் செய்தாா்.அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது .அதில் ஆதரவாக 220 பேரும் எதிராக 149 பேரும் மூலமாக குரல் வாக்கெடுப்பு மூலம் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

 

Tags :

Share via