இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள என் ஜெகவீரபுரம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி என்பவர் இன்று தனது டிவிஎஸ் எக்ஸெல் வாகனத்தில் பூதலபுரத்தில் இருந்து காரைக்குடி செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது, புதலபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஓட்டி வந்து குருசாமியின் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளார். இந்த விபத்தில் குருசாமி படுகாயம் அடைந்துள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குருசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்தை ஏற்படுத்திய முத்துப்பாண்டியின் மீது வழக்கு பதிவு செய்து காடல்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :