சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
செவ்வாய் நண்பகல் சுமார் 12.35 மணியளவில் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த பலரும், சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
சென்னை - ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளதாகவும், சென்னையில் இருந்து கிழக்கு - வடகிழக்கு திசையில் சுமார் 320 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாகவும், தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த முழு தகவல்கள் வெளியிடப்படவில்லை.
Tags :



















