கனடாவிற்கான விசா சேவை மீண்டும் துவக்கம்
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவும் கனடாவும் தூதரக உறவுகளை மீட்டெடுப்பது குறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, கனடாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ரத்து செய்யப்பட்ட சில விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து, நுழைவு விசா, வணிக விசா, மருத்துவ விசா மற்றும் மாநாட்டு விசா சேவைகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவைகள் இன்று முதல் தொடங்கும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :