அமைச்சரின் மகன், பேரனை தாக்கிய மர்ம கும்பல்

by Staff / 11-11-2023 02:30:48pm
அமைச்சரின் மகன், பேரனை தாக்கிய மர்ம கும்பல்

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மகன் மற்றும் பேரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராயநகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்ப்பதற்காக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். இவரது மகன் ரமேஷ் மற்றும் அவரது பேரன் கதிர் ஆகியோர் நேற்று இரவு வந்துள்ளனர். அப்போது பின் சீட்டில் அமர்ந்து கொண்டிருந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் வீசில் அடித்துக்கொண்டு ஆபாச வார்தைகளால் பேசியுள்ளனர். இதனை கண்டித்த அமைச்சரின் மகன் மற்றும் பேரன் மீது திடீரென தாக்குதல் நடத்திவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது.

 

Tags :

Share via