குழந்தைகளுக்கு உள்ள தனித் திறமைகளை கண்டறியும் காலமாக இந்த காலத்தை செலவிடுங்கள்.அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

by Editor / 23-05-2022 03:45:59pm
குழந்தைகளுக்கு உள்ள தனித் திறமைகளை கண்டறியும் காலமாக இந்த காலத்தை செலவிடுங்கள்.அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெம்பலகுடி இலங்கை மறுவாழ்வு முகாமில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்:

இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர், அந்த கோரிக்கையின்படி உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழக முதலமைச்சருடன கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது, இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக கடந்து கூட்டத்தொடரில் 314 கோடி ரூபாய் நிதியை தமிழக முதலமைச்சர்  ஒதுக்கினார், அதுமட்டுமில்லாமல் தற்போது இலங்கையில் இருக்கக்கூடிய பிரச்சனையை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு ‌123 கோடி ரூபாயை அனுப்பி வைத்து அங்கு உள்ள தமிழர்கள் என்று சொல்லாமல் இலங்கையில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார், அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் வாக்கு உரிமையே இல்லை என்றாலும் அவர்களையும் நாம் பேணிக்காக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

 தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது இது குறித்து தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார்.


தேர்வு முடிந்த மாணவர்கள் விடுமுறை காலங்களில் வெயிலில் அதிகமாக சுற்றக்கூடாது நீர்நிலைகள் இருக்கும் பகுதியில் கவனமாக இருக்க வேண்டும் இதற்கு முன்பு நடந்ததைப் போல் மீண்டும் நடக்க கூடாது, கோடை விடுமுறையில் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் உள்ள சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல வேண்டும், குறிப்பாக கணினி வகுப்பு நீச்சல் ஆர்ட் உள்ளிட்டவற்றுக்கு சென்று நல்ல வகையில் பயனுள்ளதாக செலவழிக்க வேண்டும். பெற்றோர்களும் பள்ளி விடுமுறை விட்டாச்சு நாம் சொல்வதைதான் குழந்தைகள் கேட்க வேண்டும் என்று வேலை வாங்குவது போல் எண்ணக்கூடாது.‌ குழந்தைகளுக்கு உள்ள தனித் திறமைகளை கண்டறியும் காலமாக இந்த காலத்தை செலவிடுங்கள்.

நீட் தேர்வை பொருத்தவரை தமிழக முதலமைச்சர் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் ஏற்கனவே ஜனாதிபதி வரை செல்லாத நீட் எதிர்ப்பு மசோதா தற்போது தமிழக முதல்வரின் அழுத்தத்தால் ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார், இது ஒருபுறம் இருந்தாலும் நீட் தேர்வு நடைபெறும் என்று இருப்பின் தங்களது துறை சார்பாக அந்தந்த பள்ளிகளில் ஹைடெக் லாப் மூலம் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு தான் வருகிறது, குழந்தைகளை எந்த வகையிலும் தயார்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. நீட் விலக்கிற்காக சட்டப்போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெறுவோம் என தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார் அதில் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

ஆன்லைனில் பாடம் கற்கும் மாணவர்களுக்கு இடையூறாக வரும் காட்சிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதே தடை செய்யப்பட்ட தான் வருகிறது. வயதின் அடிப்படையை வைத்து தான் ஒவ்வொரு செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது.ஆன்லைன் வகுப்பு என்பது கட்டாயம் கிடையாது.‌ தற்பொழுது பள்ளிக்கூடங்கள் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளது வரக்கூடிய கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் வரும்பொழுது இந்த ஆன்லைன் வகுப்பு படிப்படியாக குறைந்துவிடும் என்றார்.

 

Tags : Spend this time as a time to discover unique talents in children. Minister Anbil Mahesh Poyamozhi

Share via