அமெரிக்க பிரதிநிதிகளும் ஈரான் பிரதிநிதிகளும் அணுசக்தி பற்றிய பேச்சு

by Admin / 13-04-2025 08:58:13am
அமெரிக்க பிரதிநிதிகளும் ஈரான் பிரதிநிதிகளும் அணுசக்தி பற்றிய பேச்சு

சனிக்கிழமை அன்று ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அமெரிக்க பிரதிநிதிகளும் ஈரான் பிரதிநிதிகளும் அணுசக்தி பற்றிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஓமன் வெளியுறவு அமைச்சரினுடைய முன்னிலையில் இவ்விரு நாடுகளின் பிரதிநிதிகள் ஆக்கப்பூர்வமான சூழ்நிலையில் பரஸ்பர மரியாதை நடந்ததாக சொல்லப்படுகிறது.. இப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க தூது குழுவில் ஸ்டீவ் விட்காப், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி பங்கேற்றனர். இப்ப பேச்சுவார்த்தை நேர்மறையாகவும் ஆக்கபூர்வமாகவும் இருந்ததாக வெள்ளை மாளிகை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்த வாரமும் இப்பேச்சு வார்த்தை தொடரும் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தை அணுசக்தி திட்டம்மட்டுமே முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இந்தப் பேச்சுவார்த்தை சரியான முறையில் சுமுகமாக ஏற்படவில்லை என்றால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் இந்த பேச்சு வார்த்தைக்கு முன்பு தன் கருத்தை தெரிவித்து இருந்தார். மேலும் அவர் ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்றும் ஈரான் ஒரு மகிழ்ச்சியான நாடாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகும் ட்ரம் தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via