லாக்கப் மரணத்திற்கு முழுப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக தவெக ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என தவெக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வலியுறுத்தியுள்ளார். அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். காவல் கஸ்டடி மரணத்திற்கு முழுப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், அவரது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையை வேறு அமைச்சருக்கு வழங்க வேண்டும் என கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் வலியுறுத்தினார்.
Tags : Demand for the resignation of the Chief Minister, taking full responsibility for the death of Lockup.


















