நீதிமன்றத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே மணி ஆஜர்.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காவிரி ஆணையம் அமைக்க வலியுறுத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.இதில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி கவுரவத் தலைவர் ஜி. கே .மணி மற்றும் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா .அருள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு .கார்த்தி, நிர்வாகிகள் கதிர் ராசரத்தினம் ,சாம்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.இந்த வழக்கு விசாரணை சேலம் ஜே.எம். எண் 1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது .
இந்த விசாரணைக்காக இன்று காலை ஜி.கே .மணி நேரில் ஆஜரானார்.வழக்கை நீதிபதி கலைவாணி விசாரித்து வருகிறார்.
Tags :