கேரளா சென்றடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்ப்பு.

கொச்சியில் இருந்து தனி விமான மூலம் தற்போது திருவனந்தபுரத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடியை கேரள முதல்வர் பிரனாய் விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது காணும் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.திருவனந்தபுரம் வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்பதற்காக வழியெங்கும் கேரள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது, இன்னும் சற்று நேரத்தில் திருவனந்தபுரம் கண்ணூர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.பிரதமரை வரவேற்பதற்கு கேரள மாநில தலைநகர் தயாராகியுள்ளது. அவர் செல்லும் வழியில் செண்டை மேளம், தையம் உள்ளிட்ட கேரளா பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :