மேகதாது அணை விவகாரம்: பழனிச்சாமி கண்டனம்

மேகதாது அணை கட்டுவதற்கு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக மாநில அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், உச்சநீதிமன்ற ஆணையை மீறி செயல்படும் கூட்டாளி கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்களை வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் என்றும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும், இல்லையென்றால் அதிமுக விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
Tags :