ஆன்லைன் சூதாட்டதால் தற்கொலை செய்துகொண்ட தமிழக இளைஞர்

by Staff / 05-04-2024 03:37:08pm
ஆன்லைன் சூதாட்டதால் தற்கொலை செய்துகொண்ட தமிழக இளைஞர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ஜெயராமன். டிப்ளமோ படிப்பை முடித்துள்ள இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீது அதீத மோகம் கொண்டிருந்ததால், கடன் வாங்கி பல லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயராமன், நேற்று(ஏப்ரல் 5) நள்ளிரவு திருச்சியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories