முன்னாள் மாவட்ட செயலாளருக்கு எதிராக நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் - காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த நபர்கள் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படவில்லை என்கின்ற பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்து ஆங்காங்கே சுவரொட்டிகள் இரு சமுதாயத்தின் சார்பில் ஒட்டப்பட்டிருந்தன இந்த நிலையில் இந்தப் பிரச்சினைகளுக்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் தான் காரணம் என்று கூறி பல்வேறு பகுதிகளில் மாவட்ட பொறுப்பில் இல்லாத தனிநபர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் ஒட்டிய நபர்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்ட தூண்டிய நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை என்பவர் சார்பில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் தென்காசி காவல்துறை அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று எட்டாம் தேதி முன்னாள் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் தலைமையில் திமுக அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags : முன்னாள் மாவட்ட செயலாளருக்கு எதிராக நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் - காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார்.