by Editor /
08-07-2023
10:28:21am
கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் டி.ஐ.ஜி விஜயகுமார் இறுதிச்சடங்கின்போது காவலர்கள் வானத்தை நோக்கி 21 குண்டுகள் முழங்க துப்பாக்கிச்சூடு நடத்தி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தினர். விஜயகுமார் கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் அவருக்கு ஓசிடி(obsessive clean disorder) இருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
Tags :
Share via