பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் மாநகர பேருந்தின் மேல் ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரி திறப்பு நாளான நேற்று மாணவர்கள் பேருந்துகளில் அதிகளவில் ஏறி போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர். கல்லூரி திறப்பை ஒட்டி சென்னையில் முக்கிய கல்லூரிகளில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags :