கைது உத்தரவை எதிர்த்து ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மேல்முறையீடு

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கத்துடன், காதலனின் தம்பியான சிறுவனை கடத்திய வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. மீது வழக்கு பதியப்பட்டது. இந்த விவகாரத்தில் சிறுவனை தனது காரில் கடத்த உதவியதாக ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது செய்யப்பட்டதோடு, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்நிலையில் கைது உத்தரவை எதிர்த்து ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இவ்வழக்கு நாளை (ஜூன். 18) விசாரணைக்கு வருகிறது.
Tags :