சபரிமலையில்10 ஆம் தேதி நிறைபுத்தரி பூஜை.

by Editor / 01-08-2023 09:23:18am
சபரிமலையில்10 ஆம் தேதி நிறைபுத்தரி பூஜை.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி வியாழக்கிழமை சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை நடைபெறுகிறது.. அதனை முன்னிட்டு  09-08-23 புதன்கிழமை அன்று அச்சன்கோவிலில் இருந்து நிறைபுத்தரி ஊர்வலம் நடைபெறுகிறது..

மலையாள புத்தாண்டான சிங்கம் மாத ( ஆவணி ) பிறப்பை முன்னிட்டு அதற்கு முன்னதாக கர்கடகத்தில் ( ஆடி ) கேரளாவில் உள்ள கோவில்களில் சுவாமிக்கு நிறைபுத்தரி பூஜை நடத்துவது வழக்கம்.. அதன்படி இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி சபரிமலை உள்ளிட்ட அனைத்து கேரள திருக்கோவில்களில் நிறைபுத்தரி பூஜை சிறப்பாக நடைபெறுகிறது ..

சபரிமலையில் நிறைபுத்தரி பூஜைக்காக பிரத்யேகமாக நடை  09-08-23 புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடை திறக்கபடுகிறது..

மறுநாள் 10-08-23 வியாழக்கிழமை அன்று  காலை  4 மணிக்கு நடை திறக்கபட்டு நிர்மால்யம் முடிந்ததும் நிறைபுத்தரி நெல்கதிர்களை கருவரையில் சுவாமிக்கு முன்பாக  படைத்து நிறைபுத்தரி பூஜைகளை சபரிமலை தந்திரி மற்றும் மேல்சாந்தி  நடத்திவைப்பார்கள்.. பூஜைக்கு  பின் பக்தர்களுக்கு பிரசாதமாக பூஜை செய்யபட்ட நிறைபுத்தரி நெல்கதிர்களை வழங்குவார்கள்.. இந்த நிறைபுத்தரி பிரசாத நெற்கதிரை வாங்கி வீட்டில் வைத்தால் மிகவும் ஐஸ்வர்யம் என்பதால் கேரளாவில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு  நெற்கதிர்களை வாங்கி செல்வார்கள்..  பின் கீழ்  சாந்திக்கள்  பூஜை செய்யபட்ட நெற்கதிர்களை எடுத்து  கைகுத்தல் மூலம் அரிசி ஆக்கி புது அரிசியில் சுவாமி ஐயப்பனுக்கு நைவேத்தியம் செய்து படைப்பார்கள் .. பின் அன்றைய தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு இரவு நடை அடைக்கபடும்..

இதில்  சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்கு உள்ள நெல்கதிர்கள் அச்சன்கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்வது வழக்கம்.. கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 வருடங்கள் நிறைபுத்தரி ஊர்வலம் நடைபெறவில்லை. சன்னிதானத்தில் விளைவிக்கபட்ட நெல்கதிர்களை கொண்டு  நிறைபுத்தரி பூஜை மட்டும் நடைபெற்றது.. தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தபட்டு உள்ள நிலையில் இந்த வருடம்  நிறைபுத்தரி பூஜையை முன்னிட்டு முதல் நாள்  நிறைபுத்தரி ஊர்வலம் நடைபெறுகிறது..

 09-08-23 புதன்கிழமை காலை 4 மணிக்கு  அச்சன்கோவில் நடை திறக்கபட்டு நிர்மால்ய பூஜை முடிந்ததும் சுத்தம் செய்யபட்ட நிறைபுத்தரி நெல்கதிர்களை  51 கட்டுகளாக பட்டு வஸ்திரம் சுற்றபட்டு பூஜை செய்து பிரத்யேகமாக  அலங்கரிக்கபட்ட திருஆபரணபெட்டி வாகனத்தில் ஏற்றபட்டு காலை 5 மணிக்கு தேவசம்போர்டு அதிகாரிகள், கமிட்டிகாரர்கள், பக்தர்கள் என்று  ஊர்வலம் புறப்படும்.. அச்சன்கோவிலில் இருந்து மேக்கரை, செங்கோட்டை வழியாக ஆரியங்காவு ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில், புனலூர் கிருஷ்ணன் கோவில், புன்னல சிவன் கோயில் மற்றும் சபரிமலை செல்லும் வழிகளில் உள்ள பத்தினம்திட்டா, நிலக்கல் உள்ளிட்ட அனைத்து  முக்கிய கோவில்களிலும்  வரவேற்ப்பை  ஏற்று  பூஜைகள் செய்யப்பட்டு அந்த திருக்கோவிலுக்கு தேவையான  நெல்கதிர்கள் ஒப்படைத்து  மாலை 3 மணி அளவில் ஊர்வலம் பம்பை சென்றடையும்.. அங்கு பம்பை கனபதி கோவிலில் நிறைபுத்தரி நெல்கதிர்களை இறக்கி வைத்து பூஜை செய்யபடும். பின் பம்பையில் நீராடி இதற்கென்று விரதம் இருந்து வரும்  51 பக்தர்கள் 51  நிறைபுத்தரி கட்டுகளை  தலைசுமையாக செண்டை மேளம் முழங்க எடுத்து சென்று மாலை 6.30 மணி அளவில் சன்னிதானத்தில் ஒப்படைப்பார்கள்.. அங்கு  சபரிமலை தேவஸ்வம் அதிகாரிகள் பஞ்சவாத்தியம் முழங்க நிறைபுத்தரி நெல்கதிர்களை வரவேற்று  பெற்று கொள்வார்கள்..  இதுவே நிறைபுத்தரி ஊர்வலம் ஆகும். 

அதனை தொடர்ந்து மறுநாள் காலை 5 மணிக்கு நிறைபுத்தரி பூஜை நடைபெறும்.
இந்த நிறைபுத்தரி ஊர்வலத்திற்கான ஏற்ப்பாட்டை திருவிதாங்கூர் தேவஸ்வம் உதவி ஆனையர் ஜெபிரகாஷ் அச்சன்கோவில் நிர்வாக அதிகாரி துளசிதரன் பிள்ளை திருஆபரணபெட்டி கமிட்டி தலைவர் ஏசிஎஸ்ஜி ஹரிஹரன் கோவில் கமிட்டி தலைவர் பிஜூலால் மற்றும் கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

 

Tags :

Share via