அனிருத் இசை நிகழ்ச்சி
மாமல்லபுரம்: நடிகர் தனுஷ் நடித்த, 3 படம் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இசையமைப்பாளராக அறிமுகமாகி, 10 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக, முதல் முறையாக, தமிழகத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி, தனியாருக்கு சொந்தமான திறந்தவெளியில், இதற்கான பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 6: 00 மணிக்கு, இந்நிகழ்ச்சி நடக்கிறது. திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' தளத்தில், நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது
Tags :