12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை
ஷிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் ராம்பூர் பகுதியில் 12 வயது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை 6-ம் தேதி இச்சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் தந்தையை கைது செய்து பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை பெற்றுள்ளது.
Tags :



















