நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

by Editor / 16-10-2021 05:38:30pm
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி  மலைப்பகுதி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக  மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால்  வேகமாக நிரம்பி வருகிறது.


நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்சி மலைப்பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால்  மாவட்டத்தில் பிரதான அணையான்143 அடி கொள்ளவு கொண்ட  பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது . விநாடிக்கு 1504 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் அணையின் நீர் இருப்பு ஏற்கனவே 100 அடியை தாண்டிய நிலையில் தொடர்ந்து மழை நீடிப்பதால்   பாபநாசம் அணையின் தற்போதைய நீர்மட்டம், 108. 30 அடியாக உள்ளது அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கணிசமான அளவில் உள்ளதால் விரைவில் 110 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 அணையிலிருந்து வினாடிக்கு 204 .75 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் வடகிழக்கு பருவமழை துவங்காத நிலையில் பெய்து வரும் மழையால் அணையில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் வடகிழக்கு பருவ மழையின் போது விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. இதுபோன்ற 156 அடி கொள்ளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 125 அடியாக உள்ளது.

 

Tags :

Share via