குற்றால அருவிகளில் முற்றிலுமாக குறைந்த நீர்வரத்து - வரிசையில் நின்று தலை நனைத்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

குற்றால அருவிகளில் முற்றிலுமாக குறைந்த நீர்வரத்து - வெயிலின் தாக்கத்தினால் வரிசையில் நின்று தலை நனைத்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
தென்காசி மாவட்டம் பிரதான சுற்றுலா தளமாக விளங்கும் குற்றால அருவிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கோடை மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில வாரங்களாக மழை இல்லாத காரணத்தினால் அருவியில் நீர் வரத்தானது முற்றிலும் தற்போது குறைந்து காணப்படுகிறது.குறிப்பாக தற்போது விடுமுறை தினங்களை ஒட்டி குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.வெயிலின் தாக்கத்தினால் குற்றாலத்திற்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் வேறு வழியின்றி வரிசையில் நின்று பெயரளவிற்கு மட்டுமே பாறையில் இருந்து விழும் நீரில் தலை நனைத்து செல்கின்றனர்.அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதால் காவல்துறையினர் பெண்கள் மற்றும் ஆண்கள் குளிக்கும் பகுதியில் வரிசையில் நிறுத்தி சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்து வருகின்றனர்.
Tags : வரிசையில் நின்று தலை நனைத்து செல்லும் சுற்றுலா பயணிகள்.