கோவில்பட்டி தேரோட்ட விழா பொதுமக்கள் கடும் அவதி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் - பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கோவில்பட்டி மட்டும் இன்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திருத்தேரோட்ட விழாவை காண வந்திருந்தனர். அமைச்சர்
சேகர்பாபு,சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ,கீதா ஜீவன் ,ஆகியோர் தேரை இணைந்து வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.இந்த நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
வழக்கமாக திருத்தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்லும் வகையில் மாதாங்கோவில் சாலை, எட்டையபுரம் சாலை , மந்திதோப்பு சாலை, கதிரேசன் கோவில் சாலை வழியாக வரும் வாகனங்கள் கோவில் வழி பகுதியில் வராமல் மாற்று வழியாக இயக்கப்படுவது வழக்கமான ஒன்று. அதிலும் குறிப்பாக கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும்.ஆனால் இந்த ஆண்டு அதுபோன்று எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் காவல்துறை சார்பிலும்,மாவட்ட நிர்வாகம் சார்பிலும் முறையாக எடுக்கப்படவில்லை என்பதால் ஆங்காங்கே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர் கட்சி பாகுபாடின்ட்ரி அதிமுக,மதிமுக,திமுக ஆகிய 3 கட்சியினர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags : கோவில்பட்டி தேரோட்ட விழா பொதுமக்கள் கடும் அவதி.