பிரபல நடிகர் மனோபாலா காலமானார்
பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான மனோபாலா (69) உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர், இயக்குநர் என திரையுலகில் தவிர்க்க முடியாத பிரபலமாக இருந்தவர் மனோபாலா. கோவையில் 1953ஆம் ஆண்டு பிறந்த இவர், 1982ஆம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை படம் மூலம் இயக்குநராகவும், 1994-ல் வெளியான தாய்மாமன் படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். நட்புக்காக, பிதாமகன், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, துப்பாக்கி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இவர், சதுரங்க வேட்டை, பாம்புசட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனோபாலா மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் ,இன்று காலமானார் . மனோ பாலா மறைவையொட்டி பாரதிராஜா தன்னுடைய உதவியாளராக இருந்த மனோபாலா சிறந்த ஓவியர் என்றும் சத்தியராஜ் தன்னுடைய நெருங்கிய 40 ஆண்டு கால நண்பர் உள்ளிட்டோர் மனோபாலாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய இரங்கல் செய்தி நீண்ட காலமாக அதிமுகவில் பேச்சாளராக இருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த் மனோபாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். நாளை காலை 10:30 மணி அளவில் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவருடைய இறுதி சடங்கு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :