இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்.

by Admin / 23-01-2026 01:14:16pm
இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்.

இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வி பி ஜி ஆர் ஏ எம் ஜி மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாத்மா காந்தி அவர்கள் இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் அவர் பெயரிலேயே தொடர வேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.சட்டப்பேரவையில்  முதலமைச்சர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது .புதிய திட்டத்தின்படி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி பகிர்வு 60 என்று 40 என்ற விகிதத்தில் மாற்றப்பட்டுள்ளது .இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 5,000 கோடிகள் நிதிச் சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .விவசாய பணிகளின் உச்சகட்ட காலங்களில் திட்டப் பணிகளுக்கு 60 நாட்கள் கட்டாய இடைவெளி விட வேண்டும் என்ற நிபந்தனை நிலமற்ற ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்திலிருந்து நீக்கியது அவரது கொள்கைகளையும் பங்களிப்பையும் குறைத்து மதிப்பிடும் செயல் என தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது .இத்திட்டம் கிராம ஊராட்சிகளின் அதிகாரத்தை பறித்து மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்வதாகவும் இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் நிலம் மேம்பாடு போன்ற உழைப்பு சார்ந்த பல முக்கிய பணிகள் புதிய சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளதால் தலித் மற்றும் பழங்குடி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தில் வேலை நாட்களை 100 லிருந்து 125 நாட்களாக உயர்த்தினாலும் அது உரிமையின் அடிப்படையில் வழங்கப்படாமல் அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.. அத்துடன் 100 நாள் வேலை திட்டம் நிதி 2.113 கோடி நிலுவையில் உள்ளது என்றும் 100 நாள் வேலை திட்டத்தில் 75 லட்சம் பேர் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

 

 

Tags :

Share via