தமிழக தடகள வீராங்கனை வித்யா ராமராஜுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ரூபாய் 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக தடகள வீராங்கனை வித்யா ராமராஜுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ரூபாய் 30 லட்சம் ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளார். இவர் 1984 ஆண்டு தடகள வீராங்கனை பி.டி . உஷாவின் சாதனையை முறியடித்து தமிழக விளையாட்டு வீரர்கள் மத்தியில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியதற்காக தமிழக அரசு சார்பாக இந்த தொகை வழங்கப்படுகிறது.
.இது குறித்து அவர் தம் பக்கத்தில் ,.ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை திருமதி பி.டி. உஷா அவர்கள் 1984-ஆம் ஆண்டு படைத்த தேசிய சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் முறியடித்து, தற்போது புதிய தேசிய சாதனையைப் படைத்திருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும். அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகிறேன்.!இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
Tags :



















