தனிக்கட்சிக்கு வாய்ப்பில்லை.. அதிமுகதான் உயிர்நாடி: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்திய நிலையில் அவர் தனிக்கட்சி தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "எந்த நிர்பந்தமும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயாராக உள்ளோம். நான் தனிக்கட்சி தொடங்க வாய்ப்பே இல்லை. அதிமுக தான் எங்கள் உயிர்நாடி" என்றார். தே.ஜ. கூட்டணியில் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு, "எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்" என்றார்.
Tags :