இன்று தமிழக பட்ஜெட்

தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் 7 முக்கிய அம்சங்களாக, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிலும் தமிழர் பண்பாடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட் அறிவிப்புக்கு காத்திருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : இன்று தமிழக பட்ஜெட்