பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியரை கைது செய்து விசாரனை

by Staff / 03-03-2025 04:52:14pm
பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியரை கைது செய்து விசாரனை

தென்காசி மாவட்டம் புளியங்குடி உள்ள அரசு உதவி பெரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிகளில்  செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் ஆண் - பெண்கள் என சுமார்  இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.  

இந்நிலையில் வழக்கம்போல் பள்ளி முடிந்த நிலையில் பத்து , பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு நேரத்தில் சிறப்பு  வகுப்புகள் நடந்தப்பட்டு வந்தாகக் கூறப்படுகிறது.  

இதில் சம்பவத்தன்று வழக்கம்போல் இரவு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுள்ளது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 30க்கும் மேற்பட்ட மாவணவர்கள் கலந்து கொண்ட நிலையில் இதில் ஒரு மாணவனை  வகுப்பாசிரியர் பிரான்சிஸ் என்பவர் தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் சிண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவன் சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனை அடுத்த மாணவனின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் சம்பவம் குறித்து  பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

இதில் சமரசம் ஆகாத  பெற்றோர்கள் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் புளியங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்ட நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பிரான்சிஸ்  என்பவரை காவல்துறையினர் சிறையில் அடைதனர்.

மேலும் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆசிரியர் பிரின்ஸ் என்பவர் சிறப்பு வகுப்பிற்கு வரும்  மாணவர்கள் பலரிடம் இதுபோன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via