நேபாள ஜனாதிபதி டெல்லி எய்ம்ஸில் அனுமதி

by Staff / 19-04-2023 04:21:59pm
நேபாள ஜனாதிபதி டெல்லி எய்ம்ஸில் அனுமதி


நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம் சந்திரா பௌடெல், உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக காத்மாண்டுவில் உள்ள மகாராஜ்கஞ்சில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக போதனா மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் அவர் விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு ராம் சந்திரா பௌடெல் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது முதன்மை ஆலோசகர் சுரேஷ் சாலிஸ் தெரிவித்தார். இந்தாண்டு மார்ச் 10ஆம் தேதி பௌடெல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

Tags :

Share via