சிறுமி, லாட்ஜிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பலாத்காரம்

by Staff / 30-11-2023 12:30:36pm
சிறுமி, லாட்ஜிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பலாத்காரம்

சிறுமியை பலாத்காரம் செய்த திருவனந்தபுரம் கோவிந்தமங்கலத்தை சேர்ந்த கோகுல் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகிய சிறுமி, கோவளத்தில் லாட்ஜ் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சிறுமியை அவரது மாற்றாந்தந்தை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கோகுலின் தொடர்பு உறுதியானது. சிறுமியின் தாய் தந்தையிடமிருந்து பிரிந்து வேறொருவருடன் வசித்துவருகிறார். பரிசோதனையில் பலாத்காரம் செய்ததற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதில், கோகுல் தான் குற்றவாளி என்று சிறுமி தெரிவித்தார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories