சிவகங்கை:பாரதிய ஜனதா கட்சியின் நகர் வர்த்தக பிரிவு தலைவர் கொலை.

சிவகங்கை காவலர் குடியிருப்பு பகுதி எதிரே உள்ள நகராட்சி கட்டிடத்தில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சியின் நகர் வர்த்தக அணி தலைவர் சதீஷ் என்பவரை நேற்று இரவு மர்ம கும்பலால் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கை நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை நகர் காவல் துறை ஐந்துக்கும் மேற்பட்டவர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : பாரதிய ஜனதா கட்சியின் நகர் வர்த்தக பிரிவு தலைவர் கொலை!