5,000 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு

by Staff / 08-05-2024 12:37:24pm
5,000 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியில் துரைமுருகன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. முதற்கட்ட விசாரணையின் படி, மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல லட்சம் மதிப்புடைய கோழிகள் மற்றும் உபகரணங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

 

Tags :

Share via

More stories

Logo