கோவிலில் சுவர் இடிந்து விழுந்து 9 சிறுமிகள் பலி
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் சோகம் நடந்துள்ளது. கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். சாகர் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் பகுதியில் உள்ள ஹர்தவுல் பாபா கோவிலில் ஞாயிற்றுக்கிழமை காலை மதச்சடங்கு நடந்து கொண்டிருந்த போது சுவர் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள் பலியாகினர். காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
Tags :