தென்காசி நகரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து.

தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து.அதாவது, சுப்புலட்சுமி என்ற பெயரில் செயல்பட்டு வரும் பாத்திரக்கடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்த கணினியானது மின் கசிவு காரணமாக பற்றி எரிந்த நிலையில், அந்த தீயானது பரவி கடையில் இருந்த மற்ற பொருட்களிலும் தீயானது பரவி உள்ளது.
இந்த சம்பவம், தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தற்போது கடையில் பற்றி எறிந்த தீயை அணைத்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags : தென்காசி நகரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து.