ஏடிஎம் மெஷினி ல்  நூதன கொள்ளை ஹரியானா சென்ற போலீசார் 

by Editor / 22-06-2021 08:42:01pm
ஏடிஎம் மெஷினி ல்  நூதன கொள்ளை ஹரியானா சென்ற போலீசார் 

 

 சென்னையில் ஏடிஎம் மெஷினில் டெக்னாலஜியை பயன்படுத்தி ரூ.30 லட்சம் வரை கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் அந்த வங்கி மேனேஜர் முரளிபாபு ஆய்வு செய்தார். அப்போது, பணம் டெபாஷிட் மெஷினில் ரூ.1.50 லட்சம் மாயமாகியிருந்தது தெரிய வந்தது.
 இதையடுத்து, சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் கடந்த 17ம் தேதி ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், ரூ.10 ஆயிரம் வீதம் 15 முறை மொத்தம் ரூ.1.50 லட்சத்தை டெபாசிட் செய்யும் மெஷினில் இருந்து எடுத்து சென்றது பதிவாகியுள்ளது.
அதாவது, மெஷினில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்கும் போது, 20 வினாடிகளில் பணத்தை எடுக்காவிட்டால், அது மீண்டும் ஏடிஎம் மெஷின்குள்ளே சென்று விட்டு, வாடிக்கையாளரின் வங்கிக்க கணக்கில் வரவு வைத்துவிடும்.
20 வினாடி முடிந்ததும் பணம் உள்ளே செல்லும் போது, சரியாக சென்சாரை கைகளால் மறைத்து ஷட்டரை அழுத்தி பிடித்து பணத்தை உள்ளே செல்ல விடாமல் எடுத்தால் மிஷிக்கு பணம் எடுத்து தெரியாது பணம் உள்ளே சென்றுவிட்டதாக மெஷின் நினைத்துக்கொள்ளும்.
இந்த நூதனத்தை பயன்படுத்தி சென்னையை சுற்றிலும் விருகம்பாக்கம், தரமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள டெபாசிட் மெஷினில் ரூ.30 லட்சம் வரை அபேஷ் செய்துள்ளனர். 
எஸ்பிஐ வங்கி அளித்த புகாரின் பேரில் போலீசார், நூதன மர்ம கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இந்த கொள்ளை கும்பல் ஹரியானாவிற்கு தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது.அங்கு போலீசை தனிப்படை சென்றுள்ளது.
நூதன மோசடியை தடுக்க சென்னையில் உள்ள எஸ்பிஐ டெபாசிட் மெஷினில் பணம் எடுக்க தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

 

Tags :

Share via