மடப்புரம் கோவிலில் நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு.

by Staff / 29-08-2025 10:22:57am
மடப்புரம் கோவிலில் நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு.

திருப்புவனம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்தபோது காரில் இருந்த நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா அளித்த புகார் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு.
கடந்த ஜூன் 27 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த மதுரை திருமங்கலம் ஜேபி கார்டன் பகுதியைச் சேர்ந்த நிகிதா நகை காணாமல் போனது தொடர்பாக அளித்த புகாரின் கீழ் தனிப்படை காவல்துறையினர் கோவில் காவலாளி அஜித்குமாரின் விசாரணை நடத்திய போது தாக்குதலில் இழந்த நிலையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐந்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஏற்கனவே இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்தினர்

நேற்று முன்தினம் நிகிதா நகை காணாமல் போனது தொடர்பாக அளித்த புகாரின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளனர்.சிபிஐ தரப்பில் நகை காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நகையை எடுத்த நபர்கள் குறித்து UNKNOWN என குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஜூன் 28ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக திருப்புவனம் காவல்துறையினர் நிகிதா அளித்த புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது சிபிஐ காவல் தரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : மடப்புரம் கோவிலில் நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு

Share via