அரசு பேருந்து இருசக்கர  வாகனத்தில் மோதி விபத்து இருவர் உயிரிழப்பு.

by Staff / 29-08-2025 10:25:19am
அரசு பேருந்து இருசக்கர  வாகனத்தில் மோதி விபத்து இருவர் உயிரிழப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து எதிரே வந்த இருசக்கர  வாகனத்தில் மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் துப்புரவு பணி செய்த பெண்ணின் மீதும் மோதி அருகில் இருந்த வீட்டில் புகுந்து விபத்து. சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி அதி வேகமாக சென்ற பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த சங்கர்  மற்றும் சாலையோரம் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த புத்தூர் ஊராட்சி துப்புரவு பணியாளர் சரண்யா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு கொள்ளிடம் போலீசார் விசாரணை.

 

Tags : அரசு பேருந்து இருசக்கர  வாகனத்தில் மோதி விபத்து இருவர் உயிரிழப்பு

Share via