அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் மோகன்லால்.

கேரளாவில் உள்ள பிரபலமான நடிகரான மோகன்லால் தனது 18-வது வயதில் 1978-ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான திரனோட்டம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து, மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து மலையாள திரை உலகில் முக்கிய நடிகராக உலா வந்து கொண்டிருக்கும் நடிகர் மோகன்லால் தனது திரை உலகில் கால் பதித்து 46 ஆண்டுகள் நிறைவடைந்து 47-வது ஆண்டுகள் நேற்று தொடங்கியுள்ள நிலையில், தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள தமிழக - கேரளா எல்லையில் உள்ள கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திடீரென அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலுக்கு வந்த நடிகர் மோகன்லாலை பார்த்த அங்கிருந்த நம்பூதிரிகள் வியப்பில் ஆழ்ந்த நிலையில், அவரை அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தனர்.
Tags : அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் மோகன்லால்.