இந்தோனேசியாவின் புதிய அதிபராக சுபியாண்டோ தேர்வு

by Staff / 21-03-2024 12:04:56pm
இந்தோனேசியாவின் புதிய அதிபராக சுபியாண்டோ தேர்வு

இந்தோனேசியாவின் புதிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, சுபியாண்டோ அதிபர் பதவியை ஏற்பார். தற்போது அவர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். சுபியாண்டோ 58.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனீஸ் பஸ்வேதாருக்கு 24.9 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. கடந்த மாதம் 14ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via

More stories