என்ன செய்ய முடியும் ஐயா?  மோடியை வறுத்தெடுத்த  சிறுமி 

by Editor / 24-07-2021 08:02:19pm
என்ன செய்ய முடியும் ஐயா?  மோடியை வறுத்தெடுத்த  சிறுமி 

 

காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு நிறைய வேலை கொடுப்பதாகவும் பிரதமர் மோடியிடம் புகாரளித்த வீடியோ ஒன்று வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று பரவலால் உலகெங்கிலும் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது பலருக்கும் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் இருந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் மூடியதால், குழந்தைகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


அந்தவகையில், காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேர ஆன்லைன் வகுப்புகளால் விரக்தியடைந்து பிரதமர் மோடியிடம் புகாரளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 1 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் சிறுமி பேசியதாவது,


எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதன்பின்னர் கணினி வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்? என்ன செய்ய முடியும் மோடி ஐயா? இவ்வாறு அவர் பேசியிருந்தார்.ட்விட்டரில் இந்த வீடியோவை 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர், 5 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

 

Tags :

Share via