திருநீற்றை பூசுவதால் இத்தனை  விஷயங்களா ?

by Writer / 09-08-2021 07:24:29pm
திருநீற்றை பூசுவதால் இத்தனை  விஷயங்களா ?

 

திருநீற்றை ஒருவருக்கு நாம் தரும் போதும், இல்லை நாம் பூசிக் கொள்ளும் போதும் . சிவனுக்குரிய ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுதல் வேண்டும். அனுஷ்டானம், சிவபூஜை செய்வோர் திருநீற்றைத் தண்ணீர் விட்டுக் குழைக்காமல் உச்சி, நெற்றி, மார்பு என இரு தோள்களிலும் பூசிக் கொள்ளுதல் வேண்டும். எக்காரணம் கொண்டும் திருநீர் கீழே சிந்துதல் கூடாது. அது போல கோயில்களில் நாம் நெற்றியில் ஈட்ட பிறகு எஞ்சிய திருநீற்றை கோயில் தூண்களில் போடுதலும் கூடாது. அதனை, ஒரு இலையில் மடித்து பத்திரப்படுத்தலாம் , முடிந்தால் மற்றவருக்குக் கொடுக்கலாம்.


ஆள்காட்டி விரலால் தொட்டு, பொட்டு போல் பூசுதல் கூடாது. நெற்றி நிறையப் பூசுதல் வேண்டும். அவ்வாறு திருநீற்றை நெற்றி நிறைய பூசும் போது , நமது முன் வினையால், பிரம்மன் நமது தலையில் எழுதியிருக்கும் கெட்ட முன்வினைப் பயன்கள் ஈசனின் அருளால் அழிக்கப்படும் என்பது ஐதீகம். அது போல, பையில் உள்ள திருநீற்றை தலைகீழாகக் கவிழ்த்தல் கூடாது. ஈர உடையுடனும், ஒற்றைத் துணி உடுத்திக் கொண்டும், ஆடை இன்றியும் திருநீற்றைப் பூசிக் கொள்ளுதல் கூடாது.கள்!

செய்யக் கூடாதவைகள்:
திருநீறு பெறும் போது இருகரங்களையும் நீட்டி ஒன்றின் மீது ஒன்றை வைத்தே வலக்கரத்தால் பெறுதல் வேண்டும். ஒற்றைக் கரத்தால் வாங்குதல் கூடாது. வாயைத் திறந்து கொண்டும், தலையை அசைத்துக் கொண்டும், பிறருடன் பேசிக் கொண்டும், பாரா முகத்துடனும், சிரித்துக் கொண்டும், தலையை கவிழ்த்துக் கொண்டும், நடந்து கொண்டும், கண்ணாடி பார்த்துக் கொண்டும் திருநீறு பூசிக் கொள்ளுதல் கூடாது .


அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.


அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. நம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தவர்களிடம் காணப்படுகின்றது.


இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாக வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.


பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.


இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்ய முடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அத்துடன் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.


இது தவிர நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும் படாமலும் சுண்டுவிரலை நேராகப் பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அதற்காகத் தான் சந்தனம், விபூதி போன்றவற்றை இடுகிறோம்.


இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில் இட்டால் வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழியில் இட்டால் நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதியில் இட்டால் தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
4.நாம் தினமும் விபூதி வைத்துக்கொள்வதற்கு பின் அறிவியல் உண்மை ஒளிந்துள்ளது. மனித உடலில் நெற்றி என்பது மிகவும் முக்கியமான பாகமாகும். நெற்றியின் வழியாகவே மனித உடலானது அதிக அளவிலான சக்தியை வெளியிடவும் உள்ளிழுக்கவும் செய்யும்.

-ரவிவர்மன் 

 

Tags :

Share via