’கொல்லங்குடி’ கருப்பாயி காலமானார்

by Staff / 14-06-2025 10:41:57am
 ’கொல்லங்குடி’ கருப்பாயி காலமானார்

சிவகங்கை மாவட்டத்தில் மதுரை தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி (99). பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் பாண்டியராஜனுடன் இவர் 'ஆண் பாவம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலைமாமணி விருது பெற்ற கருப்பாயி வயது மூப்பு காரணமாக காலமானார். அவர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via