உலக துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றது இந்தியா

by Staff / 19-08-2023 01:29:43pm
உலக துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றது இந்தியா

அஜர்பைஜானில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இத்துடன் இப்போட்டியில் இந்தியா 1 தங்கம், 1 வெண்கலம் என 2 பதக்கங்களுடன் 2வது இடத்தில் இருக்கிறது. சீனா முதலிடத்தில் உள்ளது. முன்னதாக, 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சிவா நா்வால், ஈஷா சிங் கூட்டணி 583 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறி துருக்கியின் இலாய்தா தா்ஹான், யூசுஃப் டிகெக் இணையை வீழ்த்தி தங்கம் வென்றது.

 

Tags :

Share via

More stories

Logo