தமிழக வெற்றிக்கழக அரசை பொருத்தவரை எந்த ஒரு முக்கிய பிரச்சனைகளிலும் முடிவுகளிலும் முறையான வெளிப்படத் தன்மை இல்லை .

by Admin / 01-10-2026 06:35:17pm
 தமிழக வெற்றிக்கழக அரசை பொருத்தவரை எந்த ஒரு முக்கிய பிரச்சனைகளிலும் முடிவுகளிலும் முறையான வெளிப்படத் தன்மை இல்லை .

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில.செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தபோது பாட்டாளி மக்கள் கட்சி தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் பங்கெடுக்க போவதாக பரவி வரும் செய்தி குறித்து கேட்கப்பட்ட போது, அது ஒரு வதந்தி என்றும் தமிழக வெற்றி கழக கூட்டணியில் பாமக என்பது கற்பனையானது என்றும் தமிழக வெற்றிக்கழக அரசை பொருத்தவரை எந்த ஒரு முக்கிய பிரச்சனைகளிலும் முடிவுகளிலும் முறையான வெளிப்பட தன்மை இல்லை என்றும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரங்களின் போது மக்கள் தமிழக வெற்றிக்கழக தரப்பிலே அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பொதுமக்கள் கூறியதாகவும் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இடைத்தேர்தல் பிரச்சாரங்களிலும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தங்களை தூய சக்தி என்றும் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்றும் பேசி வரும் நிலையில், களநிலவரம் அதற்கு மாறாக உள்ளதாகவும் இதற்கு தமிழக வெற்றிக்கழக தலைமை தான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் சூழலில் கூட்டணியில் இருந்தால்தான் நல்லது செய்ய முடியும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இந்த முறை கேடுகள், பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo