20 லட்ச ரூபாய் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல் .

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் சிறப்பு பிரிவு காவல் துறை ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பிணையில் ஈடுப்பட்டிருந்தனர்.அப்போது தருவைகுளம் அருகே உள்ள கல்மேடு கடற் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த வேன் டிரைவர் காளி ராஜன் மற்றும் பந்தல்குடியை சேர்ந்த அஜித் பெருமாள் ஆகியோரை கைது செய்து மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Tags : 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல் .