விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர்

by Editor / 10-10-2021 09:11:32pm
விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர்

சென்னை தாம்பரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் மாநகர பேருந்து 99A வழித்தடம் கொண்ட பேருந்தை அதன் ஓட்டுநர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று சோழிங்கநல்லூர் அருகே உள்ள டோல்கேட்டில் மழைக்காக இருசக்கர வாகனத்துடன் ஒதுங்கி நின்ற உதயகுமார் என்ற வாலிபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து நிற்க நிதானம் இல்லாமல் மது போதையில் தள்ளாடி கொண்டிருந்த ஓட்டுநரை, அந்த பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் மீட்டு தாம்பரம் பணிமனைக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த அதிகாரிகள், ஓட்டுநரையும், நடுரோட்டில் நின்ற பேருந்தையும் மீண்டும் தாம்பரம் பணிமனைக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

பொதுமக்கள் பயணம் செய்யும் மாநகரப் பேருந்து ஓட்டுநர் பட்டப்பகலில் மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரில் வாகனத்தில் வந்தவர்கள், பேருந்து ஓட்டுநர் நிதானம் இல்லாமல் இருப்பதை அறிந்து, சுதாரித்துக்கொண்டு ஓரங்கட்டியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. குடிபோதையில் பேருந்து ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீதும் நடத்துனர் மற்றும் பணிமனை மேலாளர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும், சக வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்

 

Tags :

Share via