புன்னையாபுரம் கிராமத்தில் விமர்சையாக கிருஷ்ண ஜெயந்தி திருவிழா.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு 50 கிலோ இளவட்ட கல்லை தூக்கி அசத்திய இளைஞர்கள் . வழுக்கு மரம் ஏரியும், உறியடித்தும் கிராம மக்கள் உற்சாக கொண்டாட்டம்.
கடையநல்லூர் அருகே உள்ள புன்னையாபுரம் கிராமத்தில் விமர்சையாக கிருஷ்ண ஜெயந்தி திருவிழா கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு கிராம இளைஞர்கள் இடையே வெவ்வேறு விதமான வயதுக்கு ஏற்ப விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பாரம்பரிய விளையாட்டான வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், இளவட்ட கல்லை தூக்கி பின்புறமாக போடுதல் என பல்வேறு விதங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் 50 முதல் 95 கிலோ இளவட்ட கற்களை அசால்டாக தூக்கி பின்புறமாக போட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பழுப்புழுப்பாக என்னை தடவிய வழக்கு மரத்தில் ஏறி உச்சியில் உள்ள பரிசு பொருளை எடுக்க முயற்சித்தனர்.கிராம மக்கள் ஒற்றுமையாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டு கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Tags : விமர்சையாக கிருஷ்ண ஜெயந்தி திருவிழா